Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காற்றாலையிலிருந்து கிடைக்கும் மின் உற்பத்தி சற்று அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கடும் மின்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், காற்றாலையிலிருந்து கிடைக்கும் மின் உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது.

கடந்த 26 ம் தேதியன்று 1434 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று முன்தினம் 3031 மெகாவாட்டாகவும், நேற்று 3064 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது.

இதனால், 26ஆம் தேதியன்று 8,382 மெகாவாட்டாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி இன்று 9,365 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

ஆனால், சுமார் 11000 மெகா வாட் அளவுக்கு இருந்ததால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. தமிழகத்தின் பல்வேறு அனல் மின் நிலையங்களிலும் பழுதின் காரணமாகவும் பராமரிப்புப் பணிகளின் காரணமாகவும் சுமார் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி குறைந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post