Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக முதல்வரை ஆபாசமாக சித்தரித்து சிங்களவர்கள் வெறியாட்டம்


சிங்களவர்களின் மாண்பினை பாருங்கள். தமிழக முதல்வரை பெண்ணென்று கூட பாராமல் அவரை ஆபாசமாக வரைந்து போராட்டம் நடத்தி உள்ளனர் சிங்களவர்கள் . இந்த சிங்களவர்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள சில இந்திய தமிழர்கள் வக்காலத்து வேறு வாங்குகிறார்கள். சிங்கள ஆதரவு நாளிதழ்கள் தமிழர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.  இப்படி கீழ்த்தரமாக சித்தரிக்கும் சிங்களவன்  நம் தமிழ் பெண்களை என்ன பாடு படுத்தியிருப்பான் என்று நன்றாகவே தெரிகிறது. இவனுக்கு தமிழர்கள் கொடுத்த தண்டனை குறைவு என்று தான் எண்ணத் தோன்றுகிறது . 

இலங்கை பக்தர்கள் தமிழ் நாட்டில் தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு புறக் கோட்டை பகுதியிலுள்ள கடைகள் சில, மூடப்பட்டது. பின்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று அங்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ் நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து(அவர் ஜாக்கெட்டோடு மட்டும் நிற்பதுபோல) அதனை இந்திய தூதரகத்திற்கு முன்பாக கொண்டு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சிங்களவர்கள். இதேவேளை இவர்கள் இந்திய வம்சாவெளி வியாபாரிகளையும் மிரட்டி இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்துள்ளனர். நேற்றைய தினம் விமல் வீரவம்ச தெரிவித்த கருத்துக்களும் , தமிழ் வியாபாரிகளைக் குறிவைத்து வெளியிடப்பட்டதாககும்.

சில நூறு  பேர்களை இலங்கைக்கு துரத்தி விட்டதற்கே  சிங்களவர்கள் அனைவரும் இப்படி இலங்கையில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்ற சிங்களவனை எதிர்த்து தமிழ் மக்கள் குரல் கொடுத்தால் தமிழர்களை சமூக விரோதியாக சித்தரிக்க முயல்கிறது ஹிந்து, தினமலர் போன்ற ஊடகங்கள்.  



படங்கள் : அதிர்வு   
[vuukle-powerbar-top]

Recent Post