Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் காவல்துறையால் அபகரிக்கப்பட்ட மக்களின் முதற்கட்ட சொத்து விபரங்கள்

இடிந்தகரையில் போராட்டம் இடம்பெற்றதும் போராட்ட குழுவினரை காவல்துறை தாக்கியதும் அனைவரும் அறிந்ததே.

இடிந்தகரை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இருக்கும் மக்களின் சொத்துக்களை காவல்துறையினர் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாது சில சொத்துக்களை அபகரித்தும் சென்றுள்ளனர்.

40 க்கும் மேற்பட்ட படகுகளும் 20 க்கு மேற்பட்ட வீடுகளும் உந்துருளிகளும் சேதமாக்கப்பட்டதுடன் மற்றும் நகைகளையும் பணங்களையும் அபகரித்து சென்றுள்ளனர் காவல்துறையினர்.

அதை பற்றிய விபரங்களை அங்கிருக்கும் எமது செய்தியாளர் சேகரித்து அனுப்பியுள்ளார்,

1. யோசப் பிரவீன் - படகு இயந்திரம் சேதம் - 1 1/2 இலட்சம்

2. சந்தானம் சந்தியா - படகு இயந்திரம் சேதம் - 1 1/2 இலட்சம்

3. மார்டின் இராயப்பன் - படகு இயந்திரம் சேதம் - 1 1/2 இலட்சம்

4. அந்தோணி - படகு இயந்திரம் சேதம் - 1 1/2 இலட்சம்

5. சகாயம் - படகு இயந்திரம் சேதம் - 1 1/2 இலட்சம்

7. ஜஸ்டின் (உவரி) - படகு இயந்திரம் சேதம் - 1 1/2 இலட்சம்

8. சுனாமி காலேணி - இல 48 - திருமதி யூடியா - தொலைக்காட்சிப்பெட்டி (TV),  அலுமாரி (Berow), 5 சவரன் நகைகள், 20000 ரூபா ரொக்கப்பணம்.

9. சுனாமி காலேணி - இல 14 - லூர்து சாமி - கதவு ,கண்ணாடி, வீட்டுப்பொருட்கள் மற்றும் 600 ரூபா பணம்.

10. சுனாமி காலேணி - இல 15 - கல்ப்பனா - வீடு சேதமாக்கப்பட்டது.

11. சுனாமி காலேணி - இல 36 - யோகேஷ் - தொலைகாட்சிப்பெட்டி, மின்விசிறி (Fan), கதவு, அலுமாரி அனைத்தும் சேதமாக்கப்பட்டதுடன் நான்கு மோதிரமும் அபகரிக்கப்பட்டுள்ளது.

12. சுனாமி காலேணி - இல 12 - மின் விளக்குகள், கதவு, சன்னல்கள் மற்றும் அவர்களின் சில்லரைக்கடையினையும் சேதப்படுத்தியுள்ளனர்.

13. சுனாமி காலேணி - இல 13 - சந்தகுரூஸ் நிமலா - வீடு அனைத்தும் முழுமையாக சேதம்.

14 . சுனாமி காலேணி - இல 47 - சகாய ராஜ் - வீடு அனைத்தும் முழுமையாக சேதம்.

15. இன்பன்ட் - பல்சர் உந்துருளி (Pulsar Bike) காவல்துறை அபகரிப்பு.

16. வால்ட்டர் - ஹீரோ ஹோண்ட ஸ்ப்லேண்டர் பிளஸ் உந்துருளி (Hero Honda Splendor Plus Bike) காவல்துறை அபகரிப்பு. ( TN 22 BE 6735)

17. துருமன் - TVS 50 உந்துருளி - காவல்துறை அபகரிப்பு (TN 59 A 8378)

18. பெலிகொன் - Honda Sing உந்துருளி - காவல்துறை அபகரிப்பு (TN 72 3470)

19. வேன்னிஸ் - Splendor Bro Bike - காவல்துறை அபகரிப்பு

20. துரோனோ - 2 சிறிய இரக சரக்குந்து (குட்டியானை) - (TN 72 Q 2984), (TN 72 TE 4054) காவல்துறை அபகரிப்பு.

21. ரிச்சட் - Discover Bike - காவல்துறை அபகரிப்பு - (TN 72 0417)

22. முற்றுகை போராட்டத்தில் பயன்படுத்திய Focus Lite 8, ஒலி உபகரணங்கள், Generator 2, 30 Tube Lite , Many Sound Generator ஆகியவை காவல்துறையால் சேதமாக்கப்பட்டுள்ளது.

23. GTV நிருபர் முரளி Discover Bike காவல்துறையால் சேதமாக்கப்பட்டது. (TN 72 V 8445)

24. பிரபு - பசுமைத்திட்டம் - கதவு, சன்னல்கள் காவல்துறையால் சேதம்.


இதுவரைக்கும் கிடைக்கப்பெற்ற தகவலில் இவை அனைத்துமே எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் எவ்வளவு சேதம் என்பதை எம் செய்தியாளர் எடுத்து எமக்கு அனுப்புவார் என கூறப்படுகிறது.

இந்த சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து தக்க நட்ட ஈட்டினையும் கொடுக்க வேண்டும் என அம்மக்கள் கேட்டுக்கொள்வதாக அங்கிருக்கும் எம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post