Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் காவல் ஆணையரை சந்தித்து ஆலோசனை

ஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு சென்னை அமெரிக்க துணை தூதரகம் இன்று திறக்கப்பட்டது. 

தூதரக பாதுகாப்பு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து தூதரக அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். 

முகமது நபியை விமர்சிக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க திரைப்படத்தை தடை செய்யக் கோரி, அமெரிக்க துணை தூதரகம் அருகே இஸ்லாமிய அமைப்புகள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டன. 

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது தூதரகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துணை தூதரகத்திற்கு நேற்றுவரை விடுமுறை அளிக்கப்பட்டது. 

பாதுகாப்பு காரணங்களால், அந்த பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு தூதரகம் இன்று திறக்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை, தூதரக அதிகாரிகளை இன்று சந்தித்தனர். 

இந்த சந்திப்பின்போது விசா விண்ணப்பதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

துணை தூதரகம் திறக்கப்பட்டாலும், விசா விண்ணப்பதாரர்களுக்கான சேவை இன்னும் தொடங்கவில்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமும் துாதரகத்திற்கு வரும் 1000 விசா விண்ணப்பதார்களுக்கு உரிய பாதுகப்பு கொடுக்கப்பட்டால் தான் விசா சேவை தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post