Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போர்க்குற்ற விசாரணை ராஜபக்சவிடம்-அனைத்துலக நீதிமன்ற நீதிபதியிடம் மனு


இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைகள் தொடர்பாக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு, கோரி அனைத்துலக நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரியிடம் அதிமுக சட்டவாளர்கள் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 19ம் நாள் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையிலேயே, புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக சட்டவாளர்கள் குழு நேற்று புதுடெல்லியில் அனைத்துலக நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரியை சந்தித்து இந்த மனுவைக் கையளித்தது.

அனைத்துலக நீதிமன்ற நீதிபதியிடம் இந்திய அரசியல் கட்சி ஒன்று இத்தகைய மனுவைக் கையளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

அனைத்துலக நீதிபதி பதவிக்கு தல்வீர் பண்டாரியை நியமிப்பது தொடர்பாக ஐ.நா பொதுச்சபையில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, இலங்கை அதற்கு எதிராக வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post