Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மகிந்தவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்தது இந்திய அரசு


இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, முழுமையாக பாதுகாப்பு அளிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

அத்துடன் சாஞ்சி மற்றும் புதுடெல்லியில் இலங்கை அதிபருக்கு எதிரான எந்தப் போராட்டங்களும் நடத்தப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கை அதிபரின் வருகையை முன்னிட்டு இந்தப் பகுதிகளில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்ப்பு சக்திகளை அடையாளம் காணும் சிறப்பு நடவடிக்கையை இந்திய காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர், ஈடுபட்டுள்ளதாக, புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபரின் இந்தப் பயணத்தின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் மத்திய அரசு அக்கறையுடன் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சாஞ்சியில் இலங்கை அதிபர் பங்கேற்கும் நிகழ்வு ஒரு அரசியல் நிகழச்சி அல்ல என்றும், எனவே இலங்கை மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், மதிமுக பொதுச்செயலர் வைகோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாஞ்சியில் நடைபெறும் நிகழ்வுக்கான இலங்கை அதிபரின் அழைப்பை ரத்துச் செய்யுமாறும், இல்லையேல் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாகவும், மத்தியப் பிரதேச முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையிலேயே, மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு வைகோவுக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இது ஆசிய நாடுகளிடையே அமைதியை உருவாக்குவதற்கான அடிதளம் என்றும், அரசியல் நிகழ்வு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, மத்தியப் பிரதேச முதல்வரின் வேண்டுகோளை நிராகரித்துள்ள வைகோ, சாஞ்சியில் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post