Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க பா.ஜ.க. முடிவு

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே சூரஜ்கண்டில் அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை பாரதிய ஜனதா ஏற்கவில்லை என்றும், இத்திட்டம் சிறு வியாபாரிகளுக்கும் விவாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

12 கோடிக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளை பாதிக்கும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய நிதின் கட்கரி, இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் உறுதியாக கூறினார்.

சாதாரண மக்களின் நலனுக்காக தங்கள் கட்சி பாடுப்பட்டு வருவதாகவும், பாராளுமன்றத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது பிற கட்சிகளின் ஆதரவையும் கேட்டுப் பெறுவோம் என்றும் நிதின் கட்கரி கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post