Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஸிம் திரிவேதி விடுதலை


மும்பையில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அஸிம் திரிவேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள கார்ட்டூனிஸ்ட் அஸிம் திரிவேதி இரண்டு நாட்களுக்கு முன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு அர்த்துர் ரோட் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இவர் அன்னா ஹசாரே குழுவுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கேலிச்சித்திரங்களை வரைந்தது குறிப்பிடத்தக்கது.இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கின் கீழ் அஸிம் திரிவேதி கைதுசெய்யப்பட்டார்.இதன் பின் தற்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 5000 ரூபாய் பிணைத்தொகையுடன் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் கருத்து சுதந்திரம் தடுக்கப்படுவதாகவும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தால் தேசத்துரோக வழக்கு பாயவதாக அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post