Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை கிண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடருந்து மறியல்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை கிண்டியில் இடதுசாரி கட்சியினர் ஏராளமானோர் தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயிலை மறித்த அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை திரும்ப பெறவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பேருந்து போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தேவேந்திர பிஸ்வாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பார்வர்ட் பிளாக் கட்சி எம்.எல்.ஏ கதிரவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ் .தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1200 தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post