மதுரை பிஆர்பி கிரனைட் நிறுவனம் மீது மேலும் இரு வழக்குகளை மேலூர் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த பிஆர்பழனிச்சாமிக்கு சொந்தமான பிஆர்பி கிரனைட் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அந்நிறுவனம் மீது சட்டவிரோதமாக கிரனைட் வெட்டி எடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிஆர்பி கிரனைட் நிறுவனம் மீது போலீசார் மேலும் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
மதுரை மேலூர் தெற்குத் தெரு கால்வாயை மறைத்து கட்டடம் கட்டியதாகவும், வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள கால்வாயை சேதப்படுத்தியதாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.