Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை விமானநிலையத்தை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு

சென்னை விமானநிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் 72 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

விமானநிலைய வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், சென்னை தவிர கொல்கத்தா மற்றும் சிறுநகரங்களிலுள்ள மற்ற விமானநிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தினர். 

இந்திய விமான பணிகள் ஆணையத்தில் புதிதாக ஏ.என்.எஸ் கார்ப்பரேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள விமான நிலைய ஊழியர்கள், பணிமூப்பு மற்றும் ஓய்வூதிய குளறுபடிகளை களையவும் வலியுறுத்தியுள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள 126 விமான நிலையங்களிலும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் 72 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறிய விமான நிலைய ஊழியர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post