Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யுவன் ஷங்கர் ராஜாவுக்காக காத்திருக்கும் "ஆதலால் காதல் செய்வீர்" படக்குழு.


இளம் தலைமுறையினரால் பெரிதும் பாராட்டப்படும் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா.இவரது பாடல்கள் அனைத்தும்  அவை வெளியாகும் காலகட்டத்தில் மிக பிரபலமாக எல்லோராலும் பேசப்படும்.

இசையமைப்பதோடு  மட்டும் நின்றுவிடாத யுவன், சில சமயங்களில்  அவர் இசையமைத்த பாடல்களில் தோன்றி தனது அழகான நடன அசைவுகளால் தனது இரசிகர்களை உற்சாகப்படுத்தியுமுள்ளார்.அவ்வாறு அவர் தோன்றிய பாடல்களில் பில்லா 2 மற்றும் சரோஜா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தற்போது  அவர் இசையமைத்துள்ள இயக்குனர் சுசீந்திரனின் "ஆதலால் காதல் செய்வீர்" என்ற படத்தின் பாடல் காட்சியில் தோன்றி மீண்டும் நடனம் ஆடவுள்ளார் யுவன்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் சுசீந்திரன்,இப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில்,யுவன் தோன்றும் பாடல் காட்சி மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும்,இப்பாடல் காட்சி மிக விரைவில் விரைந்து எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு மேலும் கருத்து தெரிவித்த சுசீந்திரன், "ஆதலால் காதல் செய்வீர்" படத்தின் பாடல்கள் வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

இப்படத்தை  அடுத்து இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கும் "பிரியாணி" படமானது யுவனின் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

[vuukle-powerbar-top]

Recent Post