Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தங்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி

மியன்மாரின் ஜனநாயக செயற்பாட்டாளர் ஆங் சான் சூச்சிக்கு அமெரிக்க காங்கிரஸ்சில் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த போது 2008 ஆம் ஆண்டு இந்த பதக்கம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

மியன்மார் ஜனாதிபதி தெய்ன் செய்னுக்கு எதிரான தடைகளை நீக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்து சில மணித்தியாலங்களில் சூச்சி, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை சந்தித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டு முதல் ஜனநாயக மறுசீரமைப்புக்களை புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், மியன்மார் அரசாங்கத்தின் மீதான தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

பதக்கம் வழங்கும் நிகழ்வில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன், முன்னாள் முதல் பெண்மணி லோரா புஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூச்சி கடந்த 2010 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post