Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை மக்கள் மீண்டும் கடலிற்குள் மனிதசங்கிலி போராட்டம்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தூத்துக்குடி மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் அதேவேளை இடிந்தகரை மக்களால் இன்று கடலில் இரங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் வழமை போலவே தங்களது கோரிக்கையை முன்வைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு சுமார் 3000 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பங்குகொண்டுள்ளதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் எப்போது தங்களது போராட்டத்தை நிறுத்துகிறார்களோ அப்போதே தாங்களும் மனித சங்கிலி போராட்டத்தை நிறுத்துவோம் என தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post