Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பள விகிதப்படி 65 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 72 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பு மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு 2012 ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு மூலம், இந்த நிதியாண்டுக்கு, கூடுதலாக 7 ஆயிரத்து 408 கோடி ரூபாய் கூடுதல் செலவு மத்திய அரசுக்கு ஏற்படும். 

ஆறாவது ஊதியக்குழு வகுத்த நெறிமுறைகளை பின்பற்றி இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2006 ஜனவரிக்கு முன்பாக பணியில் இருந்து ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு அந்த தேதிக்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வூதியத்திற்கு சமமான சலுகைகளை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 

இந்நிலையில், விலைவாசி உயர்வின் அடிப்படையில் தற்போது 7 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 580 கோடி ரூபாய் செலவில் திட்டங்களை செயல்படுத்தவும் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post