Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க கோரிய மனு இன்று விசாரணை

காவிரியில், நாள்தோறும் 2 டி எம் சி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, தமிழக அரசு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்துக்கு தாமதமின்றி உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட மத்திய அரசு தாமதிப்பற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, வரும் 19ம் தேதி காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு நேற்று இந்தப் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post