Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்னாள் போராளிகளை குறிவைக்கும் கேபி!


இலங்கை படையின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகளை குறிவைத்து தனதுஅரசியலில் கே.பி மிக முனைப்புடன் இறங்கியுள்ளார்.


அன்றில் இருந்து இன்றுவரைக்கும் துரோகத்தினை தமது உணர்வாகக் கொண்ட ஒரு கூட்டம் இன்றும் தமிழ் தேசியத்
துரோகி கே.பிக்குப் பின்னால் இருக்கின்றன.இவர்களில் ஒருவர் தான் அறிமுகமாகும் இடங்களில் எல்லாம் தன்னை ஒரு ஊடகவியளாலாளராக அடையாளப்படுத்திக் கொள்ளுகின்றார்.குறித்த நபருடைய நடவடிக்கையின் மூலம் நாளை முல்லைத்தீவில் உள்ள காந்தறூபன் அறிவுச் சோலையில்முல்லைத்தீவில் இருக்கின்ற முன்னாள் போராளிகள் ஒன்றினைக்கப்படவுள்ளனர்.அவர்களிடம் கலந்துரையாட கே.பி வருகைதரவுள்ளார். இன்றே அப்பகுதியில் இராணுப் புலனாய்வாளர்கள் தமதுகடமைகளைச் செய்து வருகின்றனர்.
நயவஞ்சகம் கொண்ட கே.பியின் சுயலாப அரசியலை முன்னாள் போராளிகள் புரிந்து கொண்டு நடக்க வேண்டியகட்டாயத்திற்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இல்லையேல் அவர்களுடைய வாழ்வு கேள்விக்குறியாக்கப்படும்சந்தர்ப்பம் விரைவில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post