Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்கிரசின் கொடுமை ~ தாக்கப்பட்ட பெண் காவலர்

ஓடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கை பதவிவிலக செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சி, சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே நடத்திய போராட்டத்தில், பெண் காவலர் பிரமிளா பதி போராட்டக்காரர்களால் மிக மோசமாக தாக்கப்பட்டார். 

உள்ளூர் தொலைக்காட்சிகள் இந்த போராட்டத்தை ஒளிபரப்பின. அதில், தரையில் விழுந்த பிரமிளாவை 15 -20 பேர் சூழ்ந்து கொண்டு மூங்கில் கம்புகளால் அடிக்கும் காட்சி மனதை பதற வைக்கிறது. பிரமிளா போராட்ட இடத்தில் டுட்டியில் இல்லை. 

காங்கிரஸ் பவன் அருகே அந்த கட்சியின் பெண் தலைவர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தார். அந்த இடத்திற்கு வந்த போராட்ட கும்பல் இந்த வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. 

பிரமிளா படுகாயத்துடன் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைதியாக போராடும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். 

அப்போது சிலர், என்னைப் பிடித்திழுத்து கம்புகளால் மிருகத்தனமாக அடித்தனர். கீழே விழுந்த என்னை உதைக்கவும் செய்தனர்.' என்று அதிர்ச்சியிலிருந்து விடுபடாத பிரமிளா கூறினாராம்! 

இந்த வன்முறை வெறியாட்டம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரமிளாவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் கூடியுள்ள சாலையில், சட்டமன்றத்திற்கு வெளியே, ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் பொது வெளியில், தனது சக காவலர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் மோசமாக தாக்கப்படுகிறார் என்றால். இந்த தேசத்தில் எந்த இடத்திலும் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை வீடு உட்பட.
[vuukle-powerbar-top]

Recent Post