Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எந்த சூழ்நிலையிலும் எங்கள் போராட்டம் கைவிடப் படாது - அணு உலை போராளிகள் உறுதி



எந்த சூழ்நிலையிலும் எங்கள் போராட்டம் கைவிடப் படாது - அணுஉலை போராளிகள் உறுதி

சற்றுமுன் அணு உலை போராட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராயண் அவர்களிடம் பேசினோம். 

அணு உலை போராளிகள் தங்கள் குறிக்கோளில் தெளிவாக உள்ளனர் . தமிழக அரசு அணு உலை பிரச்சனைக்கு தீரு தரும் வரையில் அவர்களின் முற்றுகை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அரசுக்கு கூறிவிட்டனர் . எந்த சந்தர்பத்திலும் தங்களுடைய போராட்ட்டம் பின்வாங்கப் படாது என்றும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு தம் மக்கள் அடிபணிய மாட்டார்கள் என்றும் கூறினார்.

பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு திரண்டு வந்துள்ளது. இவர்களை அடக்க தமிழக அரசும் பெரும் படையை அங்கே நிறுவியுள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் , அங்குள்ள போராளிகள் காவல் துறைக்கும் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர் என்பது தான் . தங்களை அடக்க வந்த காவல்துறைக்கு விருந்தோம்பல் செய்த இடிந்தகரை மக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். 


[vuukle-powerbar-top]

Recent Post