Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய மீனவர்கள் விடுதலை


பாக்கிஸ்த்தானில் அடைபட்டிருந்த இந்திய மீனவர்கள் அனைவரும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு நாள் பயணமாக பாக்கிஸ்த்தான் சென்றிருந்தார்.இந்த பயணத்தில் பாக்கிஸ்த்தன் உள்துறை அமைச்சர் மாலிக்கை சந்தித்த எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியா பாக்கிஸ்த்தான் இடையிலான விஸா விதிமுறைகள் தளர்வு போன்ற முக்கிய ஒப்பத்தங்களை கையெழுத்திட்டார்.


இதன் அடிப்படையில் பாக்கிஸ்த்தான் வெளிநாட்டுத்துறை அமைச்ச்ர் ஹினா ரபானி கார் அறிவிக்கையில் ”பாக்கிஸ்த்தான் சிறையில் அடைபட்டிருந்த இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் ”என்று அறிவித்தார்.

மேலும் இது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில் ”பாக்கிஸ்த்தானின் இந்த அறிவிப்பு வரவேற்க்கத்தக்கதாகவும் மகிழ்ச்சியழிப்பதாக்வும் உள்ளது” என்று கூறினார்.

கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று பாக்கிஸ்த்தான் சிறையில் இருந்த 55 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்திய சிறையில் பாக்கிஸ்த்தான் மீனவர்கள் 120 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post