Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட புலனாய்வு அதிகாரியே குற்றவாளி

இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா குழுவினரால் தாக்கப்பட்ட இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி மேஜர் சந்தன பிரதீப் சுசேனவை, இலங்கை  இராணுவ நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

கொழும்பு தெற்குப் பகுதிக்கான இராணுவப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியான மேஜர் சந்தன பிரதீப், போதைப்பொருள் கடத்தல் குழு தொடர்பான தகவல்களை திரட்டச் சென்றிருந்தபோது, மாலக சில்வா குழுவினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

அவரது துப்பாக்கியும் மாலக குழுவினரால் அபகரிக்கப்பட்டது.

இதையடுத்து மாலக சில்வா மீது முறைப்பாடு தெரிவித்த மேஜர் சந்தன பிரதீப் பின்னர், நீதிமன்ற விசாரணையின் போது, அவர் தன்னை தாக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அதேவேளை, குறிப்பிட்ட இராணுவ அதிகாரி தாக்கப்பட்டது குறித்த விசாரணை நடத்த இலங்கை இராணுவத் தளபதி, மூன்று பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்திருந்தார்.

இலங்கை இராணுவ மேஜருக்கு எதிராக விசாரணை விசாரணை நடத்திய அந்த நீதிமன்றம் அவரைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இலங்கை  இராணுவ புலனாய்வுப் பிரிவு மேஜர் சந்தன பிரதீப், மேற்படி சம்பவத்தின் போது தான் பணியில் இருந்ததாக தெரிவித்திருந்த போதிலும், அவர் அதிகாரபூர்வ பணியில் இருக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவிடம் இது தொடர்பான அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

அவர், இது குறித்து ஆராய்ந்து தனது கருத்தை தெரிவிப்பார்.

[vuukle-powerbar-top]

Recent Post