Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யார் எதிர்த்தாலும் இலங்கை அதிபர் இந்தியா செல்வது உறுதியாம்


மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், இந்தியப் பயணத் திட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியாக இருப்பதாக புதுடெல்லிக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“சில தமிழ் ஆதரவு குழுக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், மகிந்த ராஜபக்சவின் பயணத் திட்டத்தில் மாற்றமில்லை.

தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த பயண எச்சரிக்கையை உடனடியாக விலக்கிக் கொள்ளவதற்கு வாய்ப்பில்லை.

கள நிலவரங்களை சிறிது காலம் நன்றாக ஆராய்ந்த பின்னரே, இந்த எச்சரிக்கையை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இலங்கையில் இருந்து வருவோருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற இந்திய மத்திய அரசின் உத்தரவாதம் திருப்தியளிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவத் தொடர்புகள் நீடிக்க வேண்டும்.

ஆனால், பயிற்சிகள் நடக்கும் இடங்களை இந்திய அரசாங்கமே முடிவு செய்யும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post