Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலைகளை மூடுமாறு முதல்வரை மண்டியிட்டு வேண்டுகிறேன் - கிரிஷ்ணய்யர்





கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஓராண்டாக நடந்த போராட்டம் இப்போது உச்ச நிலையை  அடைத்துள்ளது என்றே சொல்லலாம். கடந்த ஓராண்டாக கூடங்குளம் மக்கள் பல வகையில் அணு உலைக்கு எதிராக போராடி பார்த்து விட்டார்கள் . ஆனால் இந்திய அரசோ, தமிழக அரசோ மக்களின் போராட்டத்திற்கு இம்மி அளவு கூட மதிப்பு அளிக்கவில்லை . மாறாக இருப்புக் கரம் கொண்டு அவர்கள் போராட்டத்தை ஒடுக்கியது . இப்போது அணு உலைகளில் எரிபொருள் நிரப்ப அரசு ஆயத்த வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணு உலை போராளிகள் கவலை அடைத்துள்ளனர். வரும் 9 ஆம் தேதி அணு உலைக்கு எதிரான மக்கள் வேறு வழியின்றி அணு முன் நிலையத்தை முற்றுகை போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர். அரசு தரப்பில் இருந்து போராட்டத்தை ஒடுக்க ஆயிரக் கணக்கில் காவல துறையினர் , துணை ராணுவப் படையும் குவிக்கப் பட உள்ளது . இதனால் இடிந்தகரை கூடங்குளம் பகுதியே பரபரப்பாக காணப் படுகிறது. வரும் 9 ஆம் தேதி அரசுப் படையும் அணு உலைப் போராளிகளும் மோதும் அபாயம்  இருக்கிறது . இதனால் பெரும் வன்முறையை  அங்கு அரசு கட்டவிழ்த்து விடலாம் என அஞ்சப் படுகிறது. பல மக்கள் பலியாக நேரிடும். 

இந்நிலையில் முன்னாள் உச்ச நீதியமன்ற  நீதியரசர் திரு. கிருஷ்ணையர் தமிழக முதல்வருக்கு ஒரு அவசர கடிதம் ஒன்று அனுபியுள்ளார். அதில் தாம் முதல்வரை மண்டியிட்டு கெஞ்சி கேட்பதாகவும் , அணு உலையை நிறுவும் திட்டத்தை கைவிட்டு மாற்று வழியில் மின்சாரம் உற்பத்தி செய்து நாட்டு மக்களை அணு உலை அபாயத்தில் இருந்து காக்க வேண்டும் எனவும் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும் அவர் கூறியதாவது 

அணு உலைகளில் மறைந்து இருக்கும் மிகக் கொடுமையான ஆபத்தில் இருந்து  உங்கள் மக்களை தயவு செய்து காப்பாற்றுங்கள் . கேரளாவில் அணு உலைகள் தொடங்கப்பட இருந்த போது  நாங்களும், எங்கள் மக்களும் அதை கடுமையாக எதிர்த்தோம். அதனால் அந்த திட்டம் கைவிடப் பட்டது.  அணு உலைகளை சார்ந்திருக்கும் வியாபரத்தை காட்டிலும் தமிழக மக்களும் அவர்களின் உடைமைகளும் தான் அதி முக்கியமானதாக கருதப்பட வேண்டும். அதனால் அணு உலை திட்டத்தை உடனே தமிழக முதல்வர் கைவிட வேண்டும் என திரு.கிரிஷ்ணையர்  தனது கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.   




[vuukle-powerbar-top]

Recent Post