Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் உறவினர் கையில் ஒப்படைப்பு

சிவகாசி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல், பிரேதப் பரிசோதனைக்கு பின் அவர்களது சொந்த ஊருக்கு மொத்தம், மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டன.

தீ விபத்துக்கு உள்ளான ஓம் சக்தி பட்டாசு ஆலை அருகே முதலிப்பட்டி, சங்கரலிங்கபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான், அந்த பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர், நேற்றைய தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், உயிரிழந்தவர்களில் 19 பேரின் உடல்கள் , சிவகாசி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.

பின்னர்,ஒவ்வொரு கிராமங்களை சேர்ந்தவர்களின் உடல்களும், தனித்தனியாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகாசி மருத்துவமனையில் தற்போது 22 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களின் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post