Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடதுசாரிகள் மீது மம்தா பானர்ஜி தாக்கு

மேற்கு வங்களம் மாநிலத்தில் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுபாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு போன்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் மாநிலத்தில் 12 மணி நேர அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதைதொடர்ந்து மாநிலத்தின் கொல்கத்தா மற்றும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இடதுசாரிகள் கட்சி தொண்டர்கள் மாநிலத்தில் பல இடங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

தற்போது மம்தா பானர்ஜி இடதுசாரி கட்சிகளை தாக்கியுள்ளார். முழு அடைப்பு போரட்டத்தினால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் நாங்கள் போராட்டம் நடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post