Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து சேலத்தில் ஒருவர் தீக்குளிப்பு


இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து சேலத்தில் தானி ஓட்டுனர் தீக்குளித்தார்.

வருகிற 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே சாஞ்சியில் உள்ள ஒரு புத்த மத பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருகைதரவுள்ளார்.இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.இந்த நிலையில் சேலத்தில் உள்ள ஜெயராஜ் என்ற தானி ஓட்டுனர் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து சேலம் பேருந்து நிலையத்தில் உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளித்தார்.பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post