Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மும்பையில் குடியேறும் நடிகை இலியானா.


தெலுகு திரையுலகில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்து, பல அசத்தலான கதாபாத்திரங்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தெலுகு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பல காலமாக நிலையாக வைத்திருப்பவர் மெல்லிய இடையழகி நடிகை இலியானா.

அண்மையில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் நடிகை இலியானா நடித்த நண்பன் படம் மிக பெரியளவில் வெற்றிகண்டது.இப்படத்திற்கு பின்னர்  அவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை, இந்நிலையில்,இந்தி திரையுலகம் இலியானாவின்  நடிப்பை அங்கீகரித்து அவரை இந்தி நடிகையாக பிரதிநிதிப்படுத்தவுள்ளது.

இதற்கு ஆதரவாக, இந்தி சினிமாவின் வீடாக கருதப்படும் மும்பையில் நிரந்தரமாக குடியேற தீர்மானித்துள்ளார் நடிகை இலியானா.இதற்காக அங்கே ஒரு வீட்டை தேடி வருகிறார் அவர்.

அண்மையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை இலியானா , தன்னுடைய பெற்றோர்கள் கோவாவில் வசித்து வருவதாகவும்,மும்பையில் தான் குடியேறியதும் அவர்களும் தன்னுடன் வந்து தங்கிவிடுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post