அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்மி விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. அமெரிக்காவில், சிறந்த தொலைக்காட்சி தொடர்கள், நடிகர்கள், தொலைக்காட்சி தொழில் நுட்ப மற்றும் பொறியியல் கலைஞர்களுக்கு எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆண்டு முழுவதும் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டிற்கான விருதுகள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றன. வண்ணமயமான கலையரங்கில் நடைபெற்ற விழாவில், சிறந்த நாடகத்துக்கான விருது ஹோம்லேண்ட் (HOMELAND) என்ற நாடகத்திற்கு வழங்கப்பட்டது.
ஹோம்லேண்ட் தொடரில் நடித்த டேமியன் லெவிஸ் (DAMIAN LEWIS) க்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது BREAKING BAD ( பிரேக்கிங் பேட் ) தொடரில் நடித்த ஏரன் பால் (AARON PAUL) என்பவருக்கும் கிடைத்தது.
சிறந்த துணை நடிகைக்கான விருது மேகிள் ஸ்மித்திற்கு (Maggie Smith) வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி தொலைக்காட்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.