Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரஜினி இரசிகர்களுக்கு விருந்தாகும் "மை டேஸ் வித் பாட்ஷா".


மிக பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சுரேஷ் கிருஷ்ணா.தற்போது எந்த ஒரு படத்தையும் அவர் இயக்காத பட்சத்தில், அவர் இயக்கிய சில படங்கள் இன்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்து இருக்கின்றன.

தமிழ் சினிமா ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை வைத்து அவர் இயக்கிய படங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன.அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த "பாட்ஷா", "வீரா"  மற்றும் "அண்ணாமலை"  போன்ற படங்கள் மிக பெரிய வெற்றி கண்டன.

தற்போது புத்தகம் ஒன்றை எழுதும் சுரேஷ் கிருஷ்ணா,நடிகர் ரஜினிகாந்த் அவர்களோடு அவர் பணியாற்றிய மேற்கூறிய மூன்று படங்களின் படப்பிடிப்பு நாட்களில் நடைபெற்ற சுவாரஷ்யமான விடயங்களை புத்தக வடிவில் மக்களிடையே பகிரவுள்ளார்.

"மை டேஸ் வித் பாட்ஷா" என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்புத்தகத்தில், "பாட்ஷா" படம் எவ்வாறு படமாக்கப்பட்டது போன்ற விடயங்கள் எழுதப்படவுள்ளது.

சுரேஷ் கிரிஷ்ணாவுக்கு , பத்திரிக்கையாளர் மாலதி ரங்கராஜன் இப்புத்தகத்தை எழுதுவதற்கு உதவியாக உள்ளார்.தமிழ்,ஆங்கிலம் மற்றும் தெலுகுவில் வெளியாகவுள்ள இப்புத்தகத்தில் ரஜினிகாந்த் அவர்களால் சொல்லப்பட்ட "பஞ்ச்" வசனங்கள் வரை இடம் பெறவுள்ளது.

ரஜினி இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ள இப்புத்தகம் வரும் நவம்பர் மாதம் முதல் அவர்கள் கைகளில் தவழவுள்ளது.



[vuukle-powerbar-top]

Recent Post