Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு நிர்பந்தம் இல்லை : பிரதமர் மீண்டும் விளக்கம்

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில், யாருடைய கட்டளைக்கும் அடிபணிந்து மத்திய அரசு செயல்பட வில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசிய அவர் இதனை தெரிவித்தார். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எது நல்லதோ அதைத் தான் மத்திய அரசு செய்து வருகிறது என்று அவர் கூறினார். 

தற்போதைய காலகட்டத்தில் பொருளாதார சீர்திருத்தம் தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், இயற்கை வளங்களை ஒதுக்கடு செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post