Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சந்திரபாபு நாயுடு தெலங்கானா விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம்

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெலங்கானா விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். 

தெலங்கானா பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

தெலங்கானா விவகாரத்தில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கடந்த 2008ம் ஆண்டு பிரணப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்திலேயே தாம் தெளிவாகக் கூறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

2004 மக்களவை தேர்தலின் போது, தனி தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தெலங்கானா பிரச்னையின் மூலம் காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post