Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"பூலோகம்" படத்திற்காக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவி.


இயக்குனர் கல்யாண  கிருஷ்ணன் இயக்கும் "பூலோகம்" என்ற படத்தில் நடிகை த்ரிஷா ஜோடியாக குத்துச்சண்டை வீரராக நடிக்கவுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

ஒஸ்கார் ரவிசந்திரன் தயாரிக்கும் இப்படமானது,ஆசியாவின் தலை சிறந்த குத்துசண்டை வீரரான மதன் என்பவரின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது.

அண்மையில் வெளியான "பூலோகம்" படத்தின் முதல் கட்ட புகைப்படத்தில்,ஆஜானுபாகுவான உடல் கட்டமைப்புடன்,உடலோடு ஒட்டிய நிலையில் மிக இறுக்கமான சிவப்பு நிறத்திலான மேலாடையுடன்,கழுத்தில் மிக பெரிய தங்க சங்கிலி சகிதம் நடிகர் ஜெயம் ரவி இருப்பது போன்று அமைந்திருந்தது.

"உனக்கும் எனக்கும்", சந்தோஷ் சுப்பிரமணியம்" போன்ற படங்களில்  மிக மென்மையான கதாபாத்திரங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு, இம்மாறுபட்ட கதாபாத்திரம் எந்தளவுக்கு  பொருத்தமாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post