Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை



தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செய்திக் குறிப்பு :

எங்கும் இந்தி எதிலும் இந்தி என்ற நிலைப்பாட்டில் ஆளும் ஹிந்திய அரசு முடிவாக உள்ளது .இதனால் தமிழர்கள் இழந்தது ஏராளம். வங்கியில் தமிழ் இல்லை , வருமான அடையாள அட்டையில் இல்லை , கடவுச் சீட்டில் இல்லை , தொடருந்தில் இல்லை , விமான சேவையில் இல்லை , ராணுவத்தில் இல்லை , நாணயத்தில் இல்லை , இந்திய அரசு தேர்வுகளில் இல்லை , அஞ்சல் நிலையங்களில் இல்லை , கப்பல் போக்குவரத்தில் இல்லை இப்படி நம் வாழ்வில் எங்கும் தமிழுக்கு இடம் அளிக்காமல் செய்துவிட்டது ஹிந்திய அரசு . இந்தியா என்றால் ஹிந்தி தான் என்ற நிலைக்கு நம்மையெல்லாம் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு . 

இதற்கு நாம் முற்றுப் புள்ளி வைப்போம் . இந்திய நாட்டில் உள்ள 22 மொழிகளையும் இந்திய அலுவல் மற்றும் ஆட்சி மொழியாக்குவோம். இந்தியாவில் உள்ள அனைத்து  மொழிகளுக்கும் சம உரிமை கிடைக்கும் வரை போராடுவோம் . இந்திய அரசின் மொழித் தீண்டாமையை அகற்றுவோம்.   இது ஒரு சுதந்திரப் போராட்டம். ஆம் நம் மொழியை விடுதலை செய்வதற்கான போராட்டம் . இந்த இணைய மனுவில் அனைவரும் கையெழுத்திட்டு இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்புவோம் . அனைவரும் இதை பகிரும்படி தமிழர்  நடுவம் கேட்டுக் கொள்கிறது .

கீழுள்ள இணைப்பில் இதற்கான மனு உள்ளது . இந்த மனுவில் இணையத்தின் வழியாக உங்கள் பெயர்களை பதிவிடவும் . 



[vuukle-powerbar-top]

Recent Post