Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முல்லைத்தீவு தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவம்


முல்லைத்தீவு தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவம் அங்கு புத்தர் சிலையினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரித்துள்ள அப்பகுதி மக்கள் ஆலைய நிர்வாகத்துடன் இணைந்து இலங்கை இராணுவத்தினரிடம் நியாயம் கேட்கச் சென்ற போது அவர்களுக்கு இலங்கை இராணுவம் கொலைமிரட்டல் விடுத்துள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இலங்கை இராணுவத்தின் படைமுகாம் ஒன்று ஏற்கனவே அமைந்துள்ளது. எனினும் குறித்த படைமுகாமுடன் சேர்த்து ஆலைய வளாகத்தினையும் இலங்கை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.

இலங்கை இராணுவ்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள ஆலயத்தின் ஒரு பகுதியதில் இராணுவத்தினால் பாரிய அளவில் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் மேற்படி ஆலயத்தினை வழிபடச் செல்லும் அடியவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரிடம் முறையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுடன் இணைந்து ஆலய நிர்வாகத்தினர் இராணுவத்தினரிடம் சென்று நியாயம் கேட்ட போது அவர்களை இவ்விடையத்தில் தலையிட வேண்டாம் என்றும், இதனை மீறியும் அவர்கள் தலையிட்டால் தமது நடவடிக்கை வேறுவடிவில் இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post