Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை வேளச்சேரியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அமேசான் குரங்குகள் மீட்பு

சென்னை வேளச்சேரியில், ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, அமேசான் காடுகளில் மட்டுமே வாழக்கூடிய அரியவகை குரங்குகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர். 

புளூ கிராஸ் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வீட்டை சோதனையிட்ட வனத்துறையினர், அரிய வகை கிளிகள், குரங்குகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட விலங்குகளை மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. மீட்கப்பட்ட விலங்குகளில், மோர்மசூட் என்று அழைக்கப்படும் குரங்கு, இந்திய மதிப்பில் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு மேல் விலைபோகும் என்று கூறப்படுகின்றது. 

மீட்கப்பட்ட விலங்குகள் அரியவகை உயிரினமாக இருந்தாலும், இவை இந்திய வனங்களில் காணப்படாத விலங்குகள் என்பதால், இந்திய வன உயிரிகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், விலங்குகளை அடைத்து வைத்தவரை தண்டிக்க முடியாது என கூறப்படுகின்றது. 

இருந்தபோதும், விலங்குள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டதா, என்ற அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விலங்குகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த கார்த்திக் என்பவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post