Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தூத்துக்குடி மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்கின்றனர்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு தேவையான பொருளாதாரத்தை பெருக்குவதற்காக தூத்துக்குடி மீனவர்கள், இன்று முதல் கடலுக்கு செல்வதாக அறிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரியும், இடிந்தகரை பகுதி மக்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில், கடந்த 9ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், மீனவ கூட்டமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி, அனைத்து மீனவ அமைப்புகளையும் ஒன்று திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு தேவையான பொருளாதாரத்தை பெருக்கும் வகையில், இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி சென்னை, நாகை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என சில மீனவ அமைப்புகள் அறிவித்துள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post