Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை மக்கள் மீது காலாவதியான குண்டுகளை பயன்படுத்திய தமிழக காவல் துறை (படம்)


இடிந்தகரை மக்கள் மீது தமிழக மற்றும் துணை ராணுவத்தால் வீசப்பட்ட குண்டுகள் அனைத்தும் காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகள் என இப்போது தெரியவந்துள்ளது. 

இதனால் மக்களுக்கு பெருமளவில் தோல் மற்றும் கண் சம்மந்தமான வியாதிகள் ஏற்பட்டுள்ளது. இடிந்தகரை மக்கள் மீது அரசு தனது காவல்துறை வைத்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட பின், அந்த கண்ணீர் புகைக் குண்டுகளின் எச்சங்களை அப்படியே போட்டுவிட்டு சென்றது காவல்துறை. 

இடிந்தகரை மக்கள் கவனமாக அந்த குண்டுகளின்  எச்சங்களை சேகரித்து வைத்தனர். அவ்வாறு சேகரித்து வைத்த குண்டுகளின் காலாவதி தேதியை பார்த்த மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அக்குண்டுகள் அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தும் தேதிகளை கடந்து விட்டது என்பது தெரியவந்துள்ளது . அதற்கான ஆதாரம் இந்த படத்தில் நீங்கள் காணலாம். 

முன்பு ஒரு முறை இந்திய ராணுவ தளபதி , இந்திய ராணுவத்தில் பல கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் , அவைகள் காலாவதி ஆகி விட்டதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. 

இனியாவது அரசு தன்னுடைய ஆயுத தளவாடங்களை சரியான தேதிக்குள் பயன்படுத்த வேண்டும் எனவும் அல்லது கிடங்கில் இருந்து அவைகள் நீக்கப் படுத்தல் வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ...


[vuukle-powerbar-top]

Recent Post