Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க குடியரசு தலைவரிடம் திருமா வேண்டுகோள்


சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டார். 

 இம்மாதம் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வரும்போது அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியிடம் கேட்டுக் கொண்டதாக திருமாவளவன் கூறினார். 

 டெல்லியில் குடியரசுத் தலைவரை வியாழக்கிழமை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, மும்பை, கொல்கத்தா உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ஆங்கிலம் மட்டுமே வழக்கு மொழியாக உள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று "இந்தி' அல்லது அந்தந்த மாநில மொழியில் நீதிமன்றங்களில் வழக்காட அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தி மொழியில் வழக்காட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 தமிழக சட்டப்பேரவையில் 2006-ம் ஆண்டில் தமிழ் மொழி மூலம் வாதாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் 2007-ல் "அப்போதைய சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை' என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் அனுப்பியது. தமிழ் மொழிக்கு "செம்மொழி' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி ஆகவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post