Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ? வேறு என்ன காரணம் ? தீர்வு என்ன ?


மின்வெட்டுக்கு கூடங்குளம் பிரச்சனை தான் காரணமா ? வேறு என்ன காரணம் ? தீர்வு என்ன ?    

ஓய்வு பெற்ற மின் பொறியாளர் திரு சா . காந்தி அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மின் வெட்டுக்கான காரணத்தை மற்றும் தீர்வு திட்டத்தை பற்றி விளக்குகிறார் . கேள்வி பதிலாக தொகுக்கப் பட்டுள்ளது.   


1. கடந்த மூன்று ஆண்டுகளாவே தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நம் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை விளக்குவீர்களா? 

துறைரீதியாக இதனைப் பட்டியலிட முடியுமா? தொடர்ச்சியாகவே இடைவெளி சுமார் 2500 மெகா வாட்டாக இருந்து கொண்டிருக்கிறது . இரவு நேரங்களில் மின் தேவை குறைவு. ஆனால் இப்பொழுது இரவில் கூட தேவையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. இரவு நேரங்களில் உள்ள இந்தப் பற்றாக்குறை பெரும்பாலும் விவசாயத்துறையைப ் பாதிப்பதாக உள்ளது. தொழில்துறைக்கு பொதுவாக 30% பற்றாக்குறை உள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து அறிவிப்பில்லாத மின்வெட்டு தனியார் மின் நிலையங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு ள்ளது. உற்பத்தித் திறன் இருந்தும் குறிப்பாக நான்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

2. யார் அந்த நான்கு நிறுவனங்கள்? எதற்கு இந்த உற்பத்தி நிறுத்தம்?

 பிள்ளைப் பெருமாநல்லூர் (பி.பி.என் 330 மெகாவாட்) * ஜி.எம்.ஆர் வாசவி (196 மெகாவாட்) * மதுரை பவர் (106 மெகாவாட்) * சாமல்பட்டி (105.6 மெகாவாட்) மொத்தம் 737.6 மெகாவாட். மின்வாரியத்தில் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகைக்காகவே இந்த உற்பத்தி நிறுத்தம். இந்த நிலுவை தொகைகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட தமிழக மக்களைப் பிணை வைத்து மின்வாரியத்தை இக்கட்டிற்குத் தள்ளியிருக்கிறா ர்கள். இதில் கொடுமை என்னவென்றால் பிபிஎன் நிறுவனம் மின் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இந்த நேரத்திலும் மின் வாரியம் தினமும் இந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் தந்தாக வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனம் அப்போல்லோ மருத்துவமனை முதலாளிகளுக்கு சொந்தமானது. 

3. மின் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறைந்து இருப்பதற்கான காரணம் என்ன? 

நடுவன் அரசின் மின்சாரக் கொள்கையே இதற்குக் காரணம். 1992 ஆண்டிற்குப் பிறகு எதிர்கால மின் உற்பத்தி அனைத்தையும் தனியார் மட்டுமே மேற்கொள்ளலாம் என்பது தான் அது. அனைத்து மின் வாரியங்களின் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மறுக்கப்பட்டன. அதன் விளைவையே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம ். 

4.தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்க்கு பாதகமாகவும் நடந்து கொண்டதற்கான எடுத்துக்காட்டு களைக் கூறமுடியுமா? 

ஏராளமாகக் கூறமுடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியாருக்கும் மின்வாரியத்துக் கும் இடையிலான வழக்குகளில் தனியாருக்கு சாதகமாகவே ஒருதலைப்பட்சமாக ஆணையம் தீர்ப்பு வழங்கிவந்துள்ளத ு. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை நூறு கோடி ரூபாயிக்கு மேல் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவை. மிகக் குறிப்பாக, ஜி.எம்.ஆர் வாசவிக்கு வழங்கப்பட்ட 484 கோடி ரூபாய்க்கு தீர்ப்பு, பிபிஎன் 189 கோடி ரூபாய் கேட்ட வழக்கில் 1050 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கச்சொல்லி வழங்கிய தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்துக ின்றன. இவை இரண்டும் உயர்நீதிமன்றத்த ின் தடையையும் மீறி சுய ஆர்வத்தின் அடிப்படையில் ஆணையம் வழங்கிய தீர்ப்புகளே. ஆணையத்தின் மீது எங்கள் அமைப்பு கடந்த ஜூலையில் ஒரு ஊழல் புகார் மனுவை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது . பிரச்சனையை அறிந்து மக்கள்தான் ஆணையத்தின் போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டும். 

5. தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க கூடங்குளம் அணுமின் திட்டத்தால் மட்டுமே முடியும் என்ற கருத்து சமீப காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு  வருகிறது. இந்த கருத்து சரிதானா?

பைத்தியக்காரத்தனமானது.கூடங்குளத்தில் இருந்து நமக்கு கிடைக்கவிருப்பது  462 மெகாவாட்தான். இன்று நான்கு தனியார் மின் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது மூலமாக 737 மெகாவாட் இழப்பை ஏற்படுத்தியுள்ளர்கள். 2010ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டிய 2700 மெகாவாட் மின்வாரிய உற்பத்தி நிலையங்களை நான்கு தனியார் மின் நிறுவனங்கள் கொண்டுவந்த செயற்கையான கடன் தொல்லையின் காரணமாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு தனியார் நிறுவனங்கள் தமிழக மக்களைப் பிணைக்கதிகளாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்க்காமல் கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனமானது. 

6. தடையற்ற மின்சாரம் என்பது தமிழ்நாட்டில் சாத்தியம்தானா? 

சாத்தியம்தான். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரச் சட்டத்தில் (2003) பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதாவது, மீண்டும் மாநில அரசிடம் மின்சாரத் துறை ஒப்படைக்க வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

7. தமிழ்நாட்டின் மின்சார பிரச்சனையைத் தீர்க்க வழிதான் என்ன? திட்டமிடப்பட்டுள்ள அனைத்து மின்வாரிய உற்பத்தி நிலையங்களும் திட்டமிட்ட காலத்திற்குள்ளே செயல்பாட்டுக்கு க் கொண்டுவருவது தான் இதற்கான வழி. 

நன்றி: திரு. சா. காந்தி ஓய்வுபெற்ற மின் பொறியாளர் 
தலைவர் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு.
[vuukle-powerbar-top]

Recent Post