Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாட்டின் அழிவு பாதைக்கு பிரதமரே காரணம் ~ மோடி குற்றம்

நாட்டின் பொருளாதாரம் பின்னடவைச் சந்தித்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் காரணம் எனக் கூறியுள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஊழல் விவகாரங்களில் கொழிக்கும் பணத்தில் பிரதமருக்கும் பங்கு செல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், முக்கிய விவகாரங்களில் பிரதமர் மவுனம் சாதிப்பதால், ஊழல்கள் அதிகரிப்பதுடன், நாடும் அழிவுப் பாதையில் பயணிக்கிறது என்றார்.

நாட்டின் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர் மவுனம் சாதிக்கும் நிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், தற்போதைய சூழலில் கேப்டன் இல்லாத கப்பலைப் போல் நாடு இருப்பதாக கூறினார்.

பல்வேறு ஊழல்களில் இருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பிரதமர் தனது சொத்து மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளதாகவும் மோதி குற்றம்சாட்டியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post