Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் மளிகைப் பொருட்கள்

நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

அதிகரித்துவரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், பொன்னி அரிசிக்கு இணையான சொர்ணா மற்றும் ஐ.ஆர்.36, ஐ.ஆர் 50 அரிசிக்கு இணையான சன்ன ரக அரிசி மினிகிட் ஆகியவற்றை மேற்குவங்காளத்தில் இருந்து கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்திருப்பதகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டிலுள்ள அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ சொர்ணா அரிசி 25 ரூபாய்க்கும், மினிகிட் அரிசி கிலோ 31 ரூபாய்க்கும் விற்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

மேலும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டுவரும் துவரம் பருப்புக்கு மத்திய அரசு மானியத்தை நிறுத்தியபோதிலும் கிலோ 30 ரூபாய் என்ற விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேபோல் மத்திய அரசு மானியம் இல்லாத உளுத்தம்பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், பாமாயில் லிட்டர் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இதே விலைகளில் விற்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இதற்காக அரசுக்கு தொள்ளாயிரத்து ஏழு கோடியே 8 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post