Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாக நோர்வே குற்றச்சாட்டு


இலங்கையர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக நோர்வே அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நோர்வேயில் தொழில் வாய்ப்பு தேடும் இலங்கையர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த தற்காலிக வதிவிட அனுமதிகளை ரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மோசடியான முறையில் நோர்வேயில் தங்கியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளுக்கான நோர்வே தூதரகங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உரிய தகுதிகள் மற்றும் சரியான ஆவணங்களை உடைய சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் நோர்வேயில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக தற்காலிக வதிவிட வீசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் ஆயிரம் தற்காலிக வதிவிட வீசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு தற்காலிக வதிவிட வீசா பெற்றுக் கொள்ளும் பலர் போலியான அல்லது மோசடியான முறைகளில் தங்கியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


[vuukle-powerbar-top]

Recent Post