Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் திரைக்கு வந்த சிவாஜி கணேசன் அவர்களின் திருவிளையாடல்.


மறைந்த பழம் பெரும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து மிகப் பெரியளவில் வெற்றி பெற்ற படமான கர்ணன் அண்மையில் நவீன தொழிநுட்பத்துடன் வெளியாகி மீண்டும் மிக பெரியளவில் வெற்றி பெற்றிருந்தது.சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை திரையரங்கிற்கு சென்று இப்படத்தை  ஆவலுடன் கண்டு களித்திருந்தனர்

அந்த வகையில், சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் வெளியாகி, வெற்றி பெற்ற படமான திருவிளையாடல் படத்தை கர்ணன் படத்தைப் போலவே நவீன தொழில் நுட்பத்துடன் தயாரித்து கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்கள்.

பிரபல படத்தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் மகன் பரமசிவன் அவர்கள் தலைமையிலேயே மேற்படி படமானது நவீன தொழில் நுட்பத்துடன் உயிர் பெற்று தவழ்ந்து கொண்டிருக்கிறது திரையரங்குகளில்.

சென்னை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே மேற்படி படத்திற்கான நவீன தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்றிந்தன.திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன்,சாவித்திரி,பாலையா,தி.ஆர்.மகாலிங்கம், மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர்.

[vuukle-powerbar-top]

Recent Post