Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது ~ இந்தியா

ஐநா அவையின் ஒப்புதல் இல்லாமல் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று உலக நாடுகளை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா அவையின் வருடாந்திர பொதுச்சபை கூட்டம் நடைபெறுகிறது. 

இதில் பேசிய ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி, ஹர்தீப்சிங் பூரி, ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்களை செயல்படுத்தும் அரசுகள், தமது மக்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

பயங்கரவாதம் எங்கு நிகழ்ந்தாலும் அதனை முறியடிக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய ஹர்தீப் சிங் பூரி, ஐநா ஒப்புதல் பெறாமல் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது கேட்டுக் கொண்டார். 

இந்த கூட்டத்தில், ஐநா பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஈரான் அதிபர் அகமது நிஜாத் உள்பட பலர் உரையாற்றினர்.
[vuukle-powerbar-top]

Recent Post