Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்காதே. சென்னை மெரினாவில் அதிரடி பரப்புரை (படங்கள்)



தமிழர் பண்பாடு நடுவம் நடத்திய கருத்துக் கணிப்பு பரப்புரையை பற்றி அந்த அமைப்பினர் கூறியதாவது .. 

வரும் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு கொடுங்கோலன் ராஜபக்சே வருவதை ஒட்டி சென்னை மெரீனா கடற்கரையில் கருத்துக் கணிப்பு பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் செய்தது. 

இதில் மக்களிடம் நேரில் சென்று . ராஜபக்சேவை இந்தியாவிற்குள் நுழைய விடுவது சரி தானா என்று கருத்துக் கேட்டு காணொளியாக பதிவு செய்தோம். இந்த கருத்துக் கணிப்பில் பலநூறு பல்வேறு தரத்து மக்கள் பங்கேற்றனர் . பெரும்பாலும் இளையோர்கள் பங்கேற்றாலும் , ஆண்கள் , பெண்கள் , முதியவர்கள் , பாட்டாளிகள், மாணவர்கள் , வியாபாரிகள் என அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். சில வடநாட்டு மக்களும் இதில் கருத்து சொல்லியுள்ளனர் . 95 % விழுக்காடு மக்கள் ராஜபக்சே இந்தியா வருவதை விரும்பவில்லை. மீதம் 5 % விழுக்காடு மக்களில் சிலருக்கு ராஜபக்சே யாரென்று தெரியவில்லை , சிலருக்கு வந்தால் தவறில்லை என்றும் , சிலர் அது நம் நாட்டு பிரச்சனை இல்லை என்றும் , சிலர் கருத்து இல்லை என்றும் தெரிவித்தனர். மொத்தத்தில் தமிழர்கள் பெரும்பாலும் ராஜபக்சேவின் வருகையை வன்மையாக கண்டித்தனர். இந்திய அரசு இதை அனுமதிக்கக் கூடாது என்றும் ,சிலர் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் , சிலர் தமிழர்கள் அனைவரும் இதை எதிர்க்க வேண்டும் எனவும் கருத்தை பதிவு செய்தனர். இனியாவது தமிழக அரசு இந்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை இந்திய அரசுக்கு கொடுக்கவேண்டும் என இதன் மூலம் தெரிகிறது . இல்லையென்றால் தமிழர்களின் கோபத்திற்கு இந்திய அரசும் தமிழக அரசும் ஆளாகும் . 

பாரம்பரிய மீன்வரம் சங்கத் தலைவர் மகேஷ் மற்றும்  அவரது குழுவையும் தற்செயலாக மெரீனா கடற்கரையில் சந்திக்க நேர்ந்தது. அவரும் அவரது குழுவும் இந்த பரப்புரையில் கலந்து கொண்டு ராஜபக்சே இந்தியா  வருவதை எதிர்த்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். 

அரியான மாநிலத்தில் இருந்து சென்னை வந்தனர் சில சுற்றுலா பயணிகள் . இவர்களும் ராஜபக்சே இந்தியா வரக் கூடாது என்று தங்கள் கருத்தை பதிவு செய்தனர் . தமிழர்கள் எங்கள் சகோதரர்கள் , அவர்களது இன்ப துன்பங்களில் நாங்களும் பங்கேற்போம் என்று கூறினர் . இவர்களுக்கு நம் பாராட்டுகளை தெரிவித்தோம். 

நாங்கள் நின்று கொண்டிருந்த மக்கள் நெருக்கடியான பகுதியில் பலநூறு மக்கள் எங்களை பார்த்தனர். நாங்கள் ஏந்தி இருந்த பதாதைகளை படித்தனர் . ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழைய விடக் கூடாது என பல இளைஞர்களும் கருதுகின்றனர். பெரும் கோபத்தில் இவர்கள் உள்ளனர். ராஜபக்சே என்ற பெயரை கேட்ட உடனேயே அவர்கள் கொத்திப் படைக்கின்றனர். படித்தவர் முதல் படிக்காதவர் வரை , பணம் படைத்தவர் முதல் பாட்டாளி வரை ராஜபக்சே வரக் கூடாது என்று தான் கருதுகின்றனர் . இவ்வளவு எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு ராஜபக்சேவை வரவேற்பது இந்திய அரசுக்கு பெரும் அவமானமே ஆகும். 







































[vuukle-powerbar-top]

Recent Post