Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாஜக விற்கு சங்கு ஊதி மலர் வளையம் வைத்து இறுதி சடங்கு நடத்தினர் தமிழ் உணர்வாளர்கள் (படங்கள்)


மத்திய பிரதேச மாநிலத்தில் கொடுங்கோலன் ராஜபக்சேவை வரவேற்று உபசரித்த பாஜக கட்சியை கண்டித்து சென்னையில் தமிழ் உணர்வாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகை செய்தனர். அவ்வாறு  அவர்கள் முற்றுகை செய்யும் போது  போராட்டக் காரர்கள் ஒரு மலர் வளையம் ஏந்தி  சங்கு ஊதிய  படி ஒரு அணியாக புறப்பட்டு பாஜக அலுவலகத்திற்கு வந்தனர். இனப் படுகொலை செய்த இலங்கை அதிபரை பாஜக விருந்தோம்பல் செய்த காரணத்தால் அவர்கள் மனிதத்தை குழி தோண்டி புதைத்து விட்டனர் என்பதை சுட்டிக் காட்டவே இவ்வாறு ஒரு ஊர்வலம் நடத்தினர் தமிழ் உணர்வாளர்கள். மேலும் பாஜகவிற்கு இனி தமிழ் நாட்டில் சமாதி தான் என்பதையும் இதன் மூலம் அவர்கள் தெரிவித்தனர் . பின்பு போராட்டக் காரர்கள் 15 பேர்களை காவல் துறை கைது செய்தது . 















[vuukle-powerbar-top]

Recent Post