Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்ச நியுயோர்க் செல்லாதது ஏன்?

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் பங்கேற்காத்தற்கு, எந்தவிதமான அழுத்தங்களும் காரணமல்ல என்று இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நியுயோர்க்கில் நடைபெறும் ஐ. நா.பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் பங்கேற்காததற்கு எந்தவிதமான அழுத்தங்களோ அச்சங்களோ காரணமில்லை.

இப்போதுள்ளதை விட பெரும் அழுத்தங்கள் இருந்த போதெல்லாம், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக மாநாடுகளில் பங்குபற்றியுள்ளார்.

அவருக்கு இதுஒன்றும் பெரிய விடயமல்ல.

வேலைப்பளு காரணமாகவே அவர் இந்தமுறை நியுயோர்க் செல்லவில்லை.”என்று தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post