Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசியில் அதிகாரிகள் ஆய்வு


சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.பாதுகாப்பு குறைபாட்டினால் ஏற்ப்பட்ட இந்த விபத்து தொடர்பாக காவல்துறை 13 பேரை கைதுசெய்தது.இந்த நிலையில் இன்று மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் குழு சிவகாசியில் உள்ள 712 பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை,பொதுப்பணித்துறை,தீயனைப்புத்துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய மொத்தம் ஆறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.இந்த அதிகாரிகள் பல குழுக்களாய் பிரிந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 13 அறைகளைக் கொண்ட ஆலைகளை சிறிய ஆலைகளாகவும் அதற்கு மேல் அறைகள் கொண்ட ஆலைகளை பெரிய ஆலைகளாகவும் பிரித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post