Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் தமிழக ஊடகங்கள் எச்சரிக்கை தேவை

தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில தமிழ் இணையங்களில் குறிப்பாக நக்கீரன் இணையத்தில் தமிழக தமிழர்களுக்கு எதிராக தமிழீழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் என செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

நக்கீரன் திரு.கருணாநிதியின் ஆதரவு ஊடகம் என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதியின் கருத்துக்கு அமைவாகவே இச் செய்தி வெளிவந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சமீபத்தில் தமிழகம் வந்த சிங்கள் இனவெறி அரசின் விளையாட்டு அணி மற்றும் சிங்கள சுற்றுலாவாசிகள் மீதான எதிர்ப்பை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருமெடுப்பில் சிங்கள இனவெறி அரசியல்க் கட்சிகள் பங்குபற்றியது.

இப்போராட்டத்தில் பல தமிழர்கள் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையில்லை, புலம் பெயர் நாடுகளில் இனப்படுகொலைவாதி மகிந்தவை விரட்டியடிக்கப் பட்டபோதெல்லாம் தமிழீழப் பகுதிகளில் பல நூறு தமிழர்களை புலம்பெயர் மக்களின் போராட்டத்திற்கு எதிராக போராட வீடு வீடாக சென்று மிரட்டி அழைத்து வந்து போராட வைத்தது சிங்கள இனவெறி இராணுவமும் புலனாய்வுத்துறையும் இது அனைவரும் அறிந்த செய்தி.

தற்போதும் கொழும்பில் தலைமுறை தலைமுறையாக வாழும் தமிழர்களையும் மற்றும் கொழும்பில் வியாபாரம் செய்யும் தமிழக வியாபரிகளும் பல அழுத்தங்களுக்கு மத்தியில் போராட இழுத்துவரப்பட்டிருக்கின்றார்கள்.

கொழும்பில் 83ம் ஆண்டு தமிழர்களுக்கும் அவர்களுடைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என்பது மீண்டும் ஒரு முறை நடக்க வேண்டுமா என பல வியாபாரிகள் சிங்கள புலனாய்வாளர்களால் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

உண்மை நிலை இப்படியிருக்க தமிழர்களுக்கு எதிராக தமிழர்கள் ஆர்பாட்டம் தமிழ் உணர்வாளர்கள் அதிர்ச்சி எனும் நக்கீரனின் செய்தி யாரை திருப்திப்படுத்த என தெரியிவில்லை. ஆனால் எந்த ஒரு தமிழ் உணர்வாளர்களும் இதுவரை அப்படி ஒரு அறிக்கை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் டக்லசுக்கும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகள் மற்றும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு வருவதால் டக்லசின் தமிழின துரோக கும்பலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மற்றபடி நக்கீரன் கூற்று பொய்க்கின்றது. நக்கீரன் எந்த ஆதார அடிப்படையில் இச் செய்தியை பரப்புகின்றது என தெரியவில்லை.

இச் செய்தி தமிழக மற்றும் தமிழீழ தமிழர்களின் உறவுகளை பாதிப்படைய செய்யும் உடனே செய்தியை நீக்கி நக்கீரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழக உணவாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post