Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அரச பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் பல இடங்களில் சாலை மறியல்

கூடங்குளத்தில் நடக்கின்ற அரச பயங்கரவாதத்தை  கண்டித்து சென்னையில்  பரவலாக சாலை மறியல்

கூடங்குளத்தில் நேற்று காவல்துறை அறவழியில் போராடும் மக்களின் மீது வன்முறையை ஏவியது . பெண்கள் குழந்தைகள் என்று பார்க்காமல் தடியடி நடத்தியது . மக்களின் பொது உடைமைகளை அடித்து சேதப் படுத்தியது . வீடு வீடாக புகுந்து மக்களை தாக்கியது . இன்றும் கூடங்குளத்தில் பல வீடுகளில் புகிந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது . பொது மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஈழத்தில் சிங்கள ராணுவம் பொது மக்களை தாக்கியதை போல் இங்கும் தமிழ் மக்களை இந்த அரசு வேட்டையாடி வருகிறது . ஒரு விமானம் ஒன்று கூடங்குளம் பகுதியில் மிகத் தாழ்வாக பறந்தபடி உள்ளது . இதனால் குழந்தைகள் அச்சப் படுகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையின் இந்த அராஜக போக்கை கண்டித்தும் , காவல் துறை உடனே கூடங்குளம் இடிந்தகரை பகுதியில் இருந்து பின்வாங்க வேண்டும் என வலியுறுத்தியும் சென்னையில் ஆங்காங்கே  சாலை மறியல் நடந்தது.

சென்னை அண்ணா சாலையில் பல்வேறு கட்சிகள் இயக்கத்தினர் கொளத்தூர் மணி அவர்கள தலைமையில் சாலை மறியல் செய்த்தனர் . சுமார் 200 பேர்கள் கைதாகினர் .

சென்னை எழும்பூரில் நாம் தமிழர்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர். சுமார் 60 பேர்கள் கைதாகினர்

சென்னை கோயம்பேட்டில்  விடுதலை சிறுத்தைகள் சார்பாக   திருமாவளவன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நிகழ்ந்தது . இதில் நூற்றிக்கும்  மேற்பட்டவர்கள் கைது .

இவ்வாறு தமிழகமெங்கும் போராட்டம் வெடித்து வருகிறது . இருந்தும் காவல்   துறை  வெறியாட்டம் ஓயவில்லை எனத்  தெரிகிறது . இப்போது   இடிந்தகரையில்  காவல்துறை மீண்டும் நுழைந்து வன்முறையில்  இறங்கியுள்ளதாக  அங்கிருந்து வரும் செய்திகள்  தெரிவிக்கின்றன .



















[vuukle-powerbar-top]

Recent Post